Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மரக்கறி பரோட்டா

In
Updated: 11:52 GMT, Feb 27, 2017 | Published: 11:48 GMT, Feb 27, 2017 |
0 Comments
1160
icon_com
This post was written by : Risha
veg barotta

தேவையான பொருட்கள்:

பரோட்டாக்கள் – 10
வெங்காயம்- 2
நாட்டுத் தக்காளி(பெரியது) – 1
குடமிளகாய்(பெரியது)௧
கரட்- 1
பட்டாணி- 1 டம்ளர்
கொண்டைக்கடலை சுண்டல்- 1 டம்ளர்
பூண்டு- 2 பல்லு
எலுமிச்சை சாறு- 2 டீஸ்பூன்
கொத்தமல்லி- அலங்கரிக்க
காரப்பொடி- 2 டீஸ்பூன்
கேஸரி கலர்(சிவப்பு நிற)- 1/2 டீஸ்பூன்
பட்டை – 8
சோம்பு- 2 டீஸ்பூன்
ஏலக்காய்- 2
கிராம்பு- 6
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை:

1.பரோட்டாக்களை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2.கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து கொத்து பரோட்டா செய்யும் வேளையிலே குக்கரில் சுண்டல் செய்யும் பதத்திற்கு ஏற்ப வேக வைத்துத் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
3.காய்களை மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
4.அடுப்பை மிதமான தீயில் வைத்து,வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கின பூண்டையும் சேர்த்து வதக்கவும்.
5.வெங்காயம் வதங்கினதும் தக்காளி, குடமிளகாய் போட்டு சற்று வதக்கவும். தண்ணீர் விடத் தேவையில்லை.
6.கரட், பச்சைப் பட்டாணியையும் சேர்த்து உப்பு, காரப்பொடி சேர்த்து மூடி வைத்து வேக விடவும். அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விடவும்.
7.மசாலாக்குத் தேவையான பொருட்களைப் பச்சையாகவே திரித்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
8.காய்கறிகள் வெந்தவுடன் மசாலாப்பொடி, சிவப்பு நிறமூட்டி சேர்த்து நன்றாகக் கிளறவும்.
9.இதனுடன் வேக வைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து காய்களுடன் ஒன்று சேர்க்கவும்.
10.காரம் பார்த்து விட்டு எலுமிச்சைச்சாற்றைச் சேர்க்கவும்.
11.பரோட்டா துண்டுகளைக் காய்கறிக்கலவையுடன் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
12.அலங்காரத்திற்கு கொத்தமல்லித்தழைகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg