Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மெரினாவில் போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது

In இந்தியா
Updated: 11:55 GMT, Feb 27, 2017 | Published: 11:52 GMT, Feb 27, 2017 |
0 Comments
1126
This post was written by : Surenth

மெரினா கடற்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு அருகே போராட்டம் நடத்திய மாணவர்களை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த மாணவர்கள் நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக் கோட்டை நெடுவாசலில் மேற்கொள்ள உள்ள இயற்கை எரிவாயு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நெடுவாசல் கிராம மக்களுடன் இணைந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஜல்லிகட்டு போராட்டத்தினை போன்று மெரினாவில் போராட்டம் நடத்த சில மாணவர்கள் முற்பட்ட போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg