Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னார் முள்ளிக்குளம் கடற்படைத்தளத்திற்கு ஜனாதிபதி விஜயம்

In இலங்கை
Published: 13:12 GMT, Feb 27, 2017 |
0 Comments
1150
icon_com
This post was written by : Vithushagan
unnamed (16)
மன்னார் முள்ளிக்குளம் கடற்படை தளத்தில் விசேட பயிற்சியை பூர்த்தி செய்த கடற்படையினருக்கு இலட்சினை அணிவிக்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை)இடம் பெற்றது.

இலங்கையின் முதல் தடவையாக  இடம் பெற்ற  விசேட பயிற்சியை பூர்த்தி செய்த கடற்படையினருக்கே குறித்த இலட்சினை அணிவிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு சின்னங்களை அணிவித்தார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ரூவான் விஜயவர்த்தன மற்றும் , கடற்படையினர்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

முள்ளிக்குளம் கடற்படை தளம் அமைந்துள்ள பகுதி மக்களின் பூர்வீக குடியேற்ற பிரதேசமாக காணப்படுகின்றது. குறித்த காணிகளின் உரிமையாளர்கள் தொடர்ந்தும் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையில் இக் காணியை விடுவிக்க கோரி பாதிக்கப்பட்ட மக்கள் பல தடவைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.

எனினும் குறித்த காணியை விடுவிப்பது தொடர்பாக அரசு எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்காத நிலையில் ஜனாதிபதி முள்ளிக்குளம் கடற்படை தளத்திற்கு திடீர் விஜயம் செய்தமை பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.

 unnamed (13)

unnamed (14)

unnamed (15)

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg