Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜப்பானில் திரைக்கு வருகிறது பாட்ஷா!

In சினிமா
Published: 17:40 GMT, Feb 27, 2017 |
0 Comments
1076
icon_com
This post was written by : Vithushagan
201702271525385598_Baasha-release-japan-with-sub-title_SECVPF

1995ஆம் ஆண்டு ரஜினி நக்மா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘பாட்ஷா’. ரஜினி பட வரிசையில் மிகப்பெரிய வெற்றியாக அமைந்த இந்த படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படத்தில் ரஜினி ஆட்டோ டிரைவர், டான் என்ற இரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் தற்போது டிஜிட்டலில் மாற்றப்பட்டு, மீண்டும் வெளியாக தயாராக இருக்கிறது. வருகிற மார்ச் 3ஆம் திகதி தமிழகத்தில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தை ஜப்பானிலும் வெளியிட முடிவு செய்திருந்தனர். ஜப்பானில் ரஜினிக்கு ரசிகர் பட்டாளம் இருப்பதால், அவருடைய எந்தவொரு படம் வெளியானாலும் ஜப்பானிலும் உபதலைப்புடன் வெளியிடப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg