Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரேபார்வையில் இன்றைய உலகச் செய்திகள்:-

In
Updated: 17:46 GMT, Feb 27, 2017 | Published: 17:35 GMT, Feb 27, 2017 |
0 Comments
1193
icon_com
This post was written by : Kuruparan
trumb

2018 ஆம் ஆண்டுக்குரிய அமெரிக்காவின் ராணுவ செலவீனத்தை 54 பில்லியன் டொலருக்கு உயர்த்தும் வகையில் வரவுசெலவுத்திட்டத்தை பரிந்துரைக்கப்போவதாக ஜனாதிபதி டொனாலட் ரம் அறிவித்துள்ளார். டொனாலட் ரம் பரிந்துரைக்கும் இந்தத்தொ கை இந்த ஆண்டுக்குரிய ஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது 9 வீத அதிகரிப்பாகும்.

_94860394_gettyimages-630607578

பிரித்தானிய அரசாங்கத்தின் புதிய விதிகள்காரணமாக பிரித்தானிய வாகனங்களின் வருடாந்த காப்புறுதிதொகை வருடாந்தம் சராசரியாக 75 பவுண்ஸ் தொகையால் அதிகரிக்குமென கருதப்படுகிறது.  பிரித்தானிய அரசாங்கத்தின் இந்த நகர்வை பிரித்தானிய காப்புறுதியாளர்களின் சங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது
இந்த மாற்றம் அடுத்தமாதம் 20 திகதி முதல் நடைமுறைக்கு வரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

_93936908_dungavelirene

பிரித்தானிய பிரஜை ஒருவரை திருமணம புரிந்து 27 வருடங்களாக வாழ்நத சிங்கப்பூர் பெண் ஒருவர் 27 வருடங்களுக்குபின்னர் நாடுகடத்தப்பட்டுள்ளார்.
தனது துணைவர் மற்றும் பிரித்தானிய பிரஜைகளான இரண்டுபுதல்வர்கள், பேரக்குழந்தை ஆகியோரை ஐரின் கிளனெல் என்ற மேற்படி பெண் கொண்டிருக்கின்றார்.
ஆயினும் விசாவிதிகளை மீறியதான குற்றச்சாட்டில் அவர் நாடுகடத்தப்பட்டுள்ளார்.

ISIS

அல்ஜீரியாவில் ஐ.எஸ் அமைப்பின் தற்கொலைத்தாக்குதல் ஒன்று முறியடிக்கபட்டுள்ளதாக காவற்துறையினர் அறிவித்துள்ளனர்.  காவல் நிலையமொன்றை தாக்கமுயன்ற தற்கொலை குண்டுதாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அதிகாரிகள் இந்த சம்பவத்தில் இரண்டு காவற்துறையினர் காயமடைந்தாகவும் தெரிவித்துள்ளனர்.

3969

நொக்கியா நிறுவனத்தின் பிரபலமான 3310 வகை செல்பேசி மீண்டும் சந்தைக்குவரவுள்ளது. நேற்று இது பார்சலோனாவில் இடம்பெறும் உலக செல்லிட மாநாட்டில் மீண்டும் அறிமுகப்படுத்தபட்டுள்ளது  மேற்படி செல்பேசி அறிமுகப்படுத்தப்பட்டு 17 வருடங்களாகும் நிலையில் இப்போமுது மீண்டும் அது மேம்படுத்தப்பட்ட தயாரிப்பாக வருகிறது. நொக்கியா செல்பெசிகளின் பிரபலமான பாம்பு விளையாட்டும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.
3310 வகை செல்லிடபேசிகள் சந்தையில் நல்ல வரவேற்பை பெறக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg