Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிரிக்கட்டில் சாதனை படைத்தவர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது

In கிாிக்கட்
Updated: 03:35 GMT, Feb 28, 2017 | Published: 03:35 GMT, Feb 28, 2017 |
0 Comments
1149
icon_com
This post was written by : Risha
BCCI

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையினால் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதிற்கான பெயர்கள், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி 2016ஆம் ஆண்டிற்கான விருதுகளுக்காக இந்தியாவின் முன்னாள் உள்ளூர் வீரர்களான ரஜிந்தர் கோயல், பத்மாகர் ஷிவால்கர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதில் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ள ரஜிந்தர் கோயல், இதுவரை 750 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். எந்தவொரு பந்துவீச்சாளரும் இவ்வளவு விக்கெட்டுக்களை வீழ்த்தியது இல்லை எனக் கூறப்படுகிறது. இதேவேளை, ஷிவால்கர் 124 போட்டிகளில் விளையாடி 589 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

இந்திய கிரிக்கட் மற்றும் உள்ளூர் கிரிக்கட் போட்டிகளில் சாதனைப் படைத்தவர்களுக்கு இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபiயினால் விருது வழங்கி கௌரவிக்கப்படுவது வழமை என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg