Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் பணிப் புறக்கணிப்பு

In இலங்கை
Updated: 04:01 GMT, Feb 28, 2017 | Published: 03:42 GMT, Feb 28, 2017 |
0 Comments
1147
This post was written by : Surenth

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட குறித்த பணிப்புறக்கணிப்பு, நண்பகல் 12 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை நடத்த திட்டமிட்டிருப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியினால் வழங்கப்படும் பட்டத்தை இலங்கை மருத்துவ சபை அங்கீகரிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், கடந்த 20ஆம் திகதி ஊவா மாகாணத்தில் ஆரம்பித்து ஒவ்வொரு மாகாண ரீதியாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg