Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதுகாப்பு செலவீனங்களை 10 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளார் ட்ரம்ப்

In
Published: 04:31 GMT, Feb 28, 2017 |
0 Comments
1345
icon_com
This post was written by : Sylviya

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாதுகாப்பு செலவீனங்களை 10 சதவீதத்தால் அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிகரிப்பு எதிர்வரும் 2018ஆம் ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், அமெரிக்காவின் பாதுகாப்பு செலவீனங்கள் சுமார் 54 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரிக்கப்படும் எனவும் குறித்த அதிகரிப்பிற்காக செலவிடப்படும் நிதி, ஏனைய துறைகளில் ஏற்படுத்தப்படும் குறைப்புக்கள் மூலம் ஈடுசெய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வரவுசெலவுத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப், அரச முகவர் அமைப்புக்களுடன் கலந்தாலோசித்துள்ளதாகவும் இவ் வரவுசெலவுத் திட்டத்தினை எதிர்வரும் மே மாதம் காங்கிரஸிற்கு சமர்ப்பிப்பார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

01 - 2
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg