Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்மேற்கு சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிப்பு: 7 பேர் உயிரிழப்பு, 11 பேர் காயம்

In
Updated: 10:21 GMT, Feb 28, 2017 | Published: 04:54 GMT, Feb 28, 2017 |
0 Comments
1195
icon_com
This post was written by : Sylviya

தென்மேற்கு சீன நிலக்கரி சுரங்கம் ஒன்றில் எரிவாயுவை பயன்படுத்தி சுரங்கம் அகழும் போது ஏற்பட்ட வெடிப்பில், 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) லியுபன்ஷூய் நகரில் (Liupanshui) உள்ளூர் நேரப்படி காலை  7.32 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இச் சம்பவம் இடம்பெற்ற போது சுமார் 41 சுரங்கத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஏனைய பணியாளர்கள் வேறு இடத்திற்கு வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடிப்பு சம்பவத்தில் காயமுற்ற பணியாளர்கள் அனைவரும் சிகிச்சை பெறும் பொருட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத் தீடீர் வெடிப்பு ஏற்பட்டமைக்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg