Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நூறாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையை எதிர்கொள்ளவுள்ள பங்களாதேஷ்

In கிாிக்கட்
Updated: 06:25 GMT, Feb 28, 2017 | Published: 05:25 GMT, Feb 28, 2017 |
0 Comments
1461
icon_com
This post was written by : Risha
bangladesh_fbsport_647_021817032222

பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நூறாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில், பங்களாதேஷ் அணி, இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது.

கொழும்பில் நடைபெறவுள்ள 100ஆவது போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை வரும் பங்களாதேஷ் அணி, இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடவுள்ளது.

அதனைத் தொடர்ந்து காலியில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பங்களாதேஷ், எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி 100ஆவது போட்டியை கொழும்பு பீ.சரவணமுத்து விளையாட்டு மைதானத்தில் விளையாடவுள்ளது.

டெஸ்ட் அணி அந்தஸ்தை பெற்ற பங்களாதேஷ் அணி தமது முதலாவது டெஸ்ட் போட்டியினை கடந்த 2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விளையாடிய நிலையில், 16 வருடங்களின் பின்னர் நூறாவது போட்டியில் விளையாடவுள்ளது.

இப்போட்டியை தொடர்ந்து, டெஸ்ட் அந்தஸ்து பெற்ற சர்வதேச அணிகளில் இறுதியாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அணியாக பங்களாதேஷ் அணி திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg