Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரின் உடல் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டது

In இந்தியா
Published: 05:43 GMT, Feb 28, 2017 |
0 Comments
1160
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய வம்சாவளி பொறியியலாளரான ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லாவின் உடல், அவரது சொந்த ஊரான ஹைத்ராபாத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) இரவு விமான நிலையத்தை வந்தடைந்த அவரது உடல், அவரது வீடு வரை பலத்த பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கன்சாஸ் நகரில் பொறியியலாளராக கடமையாற்றி வந்த 32 வயதான ஸ்ரீனிவாஸ், அமெரிக்க கடற்படையின் மூத்த அதிகாரியான அடம் புரிண்டோன் என்பவரால் கடந்த 22ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார். இதன்போது, அமெரிக்காவை விட்டு வெளியேறவேண்டும் என்று கூறி இனத்துவேச வார்த்தைப் பிரயோகங்களையும் குறித்த அதிகாரி மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச் சந்தர்ப்பத்தில் ஸ்ரீனிவாஸின் நண்பர் ஒருவர் மீதும் இச் சம்பவத்தை தடுக்க முற்பட்ட அமெரிக்கர் ஒருவர் மீதும் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய புரிண்டோன், கொலை மற்றும் கொலைசெய்ய எத்தனித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தியரின் மீதான இத் தாக்குதலானது அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை பீதியடைய வைத்துள்ளதோடு, அந்நாட்டில் சிறுபான்மையினத்தவர்களாக வாழும் மக்களுக்கு எதிராக நடத்தப்படும் இவ்வாறான மோசமான குற்றங்களை தடுத்து நிறுத்த அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg