Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மண் மீட்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலை மாணவர்களும் ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Updated: 08:14 GMT, Feb 28, 2017 | Published: 06:20 GMT, Feb 28, 2017 |
0 Comments
1234
icon_com
This post was written by : Surenth
Jaffna Campus Student Protest 08

மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபடும் முல்லைத்தீவு கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று (செவ்வாய்க்கிழ்மை) காலை ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டம் ஒரு மணி நேரம் வரை முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக சட்டபீட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் போராட்டத்தில் “நாம் கேட்பது தனி நாடு அல்ல தாய் நிலமே” , ” வாழும் உரிமை எமக்குண்டு, காணி உரிமை எமக்குண்டு, சுய கௌரவமும் எமக்குண்டு ” போன்ற கோசங்களும் எழுப்பப்பட்டன.

பல நாட்களாக போராட்டம் நடத்தும் மக்களின் சொந்த காணிகளை அவர்களிடம் கையளிக்குமாறு இதன்போது மாணவர்களால் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் குறித்த மக்களின் நிலைமைகள் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Jaffna Campus Student Protest 01 Jaffna Campus Student Protest 04 Jaffna Campus Student Protest 05 Jaffna Campus Student Protest 06 Jaffna Campus Student Protest 07 Jaffna Campus Student Protest 08 Jaffna Campus Student Protest 09 Jaffna Campus Student Protest 10 Jaffna Campus Student Protest 11 Jaffna Campus Student Protest 12

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg