Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்யாவுடனான தொடர்பு குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு வழக்கறிஞர் தேவை இல்லை

In
Published: 06:20 GMT, Feb 28, 2017 |
0 Comments
1244
icon_com
This post was written by : Sylviya

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது, ரஷ்ய உயர் அதிகாரிகள் சிலரின் தலையீடு இருந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள, சிறப்பு வழக்கறிஞர் ஒருவரை நியமிப்பதற்கு ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டேன் என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சுகாதார காப்பீட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் நேற்று (திங்கட்கிழமை) வெள்ளைமாளிகையில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றிலேயே ட்ரம்ப் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுடனான தொடர்பு குறித்து விசாரணைகளை முன்னெடுக்க சிறப்பு வழக்கறிஞர் ஒருவர் நியமிக்கப்படுவாரா என கேள்வியெழுப்பப்பட்ட போதே ட்ரம்ப் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பதிலளித்த ட்ரம்ப், “இல்லை. அதற்கு நான் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டேன். கடந்த 10 வருட காலமாக நான் ரஷ்யாவுடன் எவ்வித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg