Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோசூலில் உள்ள முக்கிய பாலம் ஈராக் படையினர் வசமானது

In உலகம்
Updated: 08:05 GMT, Feb 28, 2017 | Published: 06:34 GMT, Feb 28, 2017 |
0 Comments
1256
icon_com
This post was written by : Sylviya
06 - 1

ஈராக்கின் மொசூலில் உள்ள தைக்ரிஸ் நதிக்கு குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலத்தை ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து ஈராக் படையினர் வெற்றிகரமாக மீளக் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜவ்சாக் மாவட்டத்தில் முன்னேறிச் சென்று தீவிரவாதிகள் வசமிருந்த நான்காவது பாலத்தை நேற்று (திங்கட்கிழமை) மீளக் கைப்பற்றியதாக  ஈராக்கின் துரித மத்திய பொலிஸ் படை தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மோசூலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் ஏறக்குறைய ஐந்து முக்கிய பாலங்கள் முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஈராக் படையினரால் கைப்பற்றப்பட்ட பாலமானது, புனரமைப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்பட்டு இராணுவ நடவடிக்கைகளின் பொருட்டு பயன்படுத்தப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பாலத்தின் உதவியுடன் அரச கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து ஏனைய பகுதிகளுக்கு உதவிப்பொருட்களை கொண்டு செல்ல முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

06 - 2
Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg