Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்

In இலங்கை
Updated: 07:48 GMT, Feb 28, 2017 | Published: 07:37 GMT, Feb 28, 2017 |
0 Comments
1866
icon_com
This post was written by : Surenth
Prisons Bus

களுத்துறை மல்வத்த பிரதேசத்தில் சிறைச்சாலை பேருந்து மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குழு அடையாளம் காணப்பட்டுள்ளது.

பாதாள உலகக் குழுவிற்கு எதிரான குழுவே குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் பொலிஸாரின் உடைக்கு நிகரான ஒரு நிறத்தில் ஆடை அணிந்து வந்தே, இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலை நடத்துவதற்கு கப் ரக வாகனம் பயன்படுத்தப்பட்டதாகவும் தற்பொழுது அந்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் இருவர் சிறைச்சாலை அதிகாரிகள் எனவும், ஏனையோர் கைதிகள் எனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg