Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொல்கத்தாவின் மிகப்பெரிய வர்த்தக கட்டடத்தில் பாரிய தீ விபத்து

In இந்தியா
Published: 07:24 GMT, Feb 28, 2017 |
0 Comments
1215
icon_com
This post was written by : Elakkiya

கொல்கத்தாவின் மத்திய சந்தைப் பகுதியில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான கட்டடம் ஒன்றில் நேற்று (திங்கட்கிழமை) இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டது.

மின்னணு கருவிகள், பாதுகாப்பு ஊசிகள், மற்றும் காலணிகள் விற்பனையாகும் மொத்த விற்பனை சந்தை அமைந்துள்ள பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

குறித்த கட்டடத்தில் எளிதில் தீப்பற்றும் பொருட்களும் காணப்பட்ட நிலையில், தீயானது வெகு விரைவாக பரவ ஆரம்பித்ததாகவும் சுமார் ஒன்பது மணித்தியாலத்தின் பின்னர் தீயணைப்பு வீரர்களின் பலத்த போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 30 தீயணைப்பு இயந்திரங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்த தீயணைப்புத்துறை தலைவர், மேற்படி தீ விபத்தினால் உயிரழப்புக்கள் எவையும் ஏற்படவில்லை என்றும், எனினும் தீயணைப்பு வீரர்கள் மூவர் சிறிய காயங்களுக்கு இலக்காகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg