Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கசகஸ்தான் சமாதான பேச்சுவார்த்தைகள் பெரும் உதவி புரிந்தன: புடின்

In ஐரோப்பா
Updated: 12:05 GMT, Feb 28, 2017 | Published: 08:00 GMT, Feb 28, 2017 |
0 Comments
1173
icon_com
This post was written by : Sylviya

கசகஸ்தான் தலைநகர் அஸ்டானாவில் இவ்வருடம் நடத்தப்பட்ட சிரிய சமாதான பேச்சுவார்த்தைகள் ஜெனீவாவில் நடத்தப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு பெரும் உதவியாய் அமைந்ததென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த கருத்தினை அவர் நேற்று (திங்கட்கிழமை) கசகஸ்தானில் உள்ள அல்மாட்டி (Almaty) நகருக்கு விஜயம் மேற்கொண்டு அந்நாட்டு ஜனாதிபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தும் போதே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “ஜெனீவாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் சிறந்த தீர்மானம் ஒன்று எட்டப்பட்டது. குறித்த தீர்மானம் எட்டப்படுவதற்கு கசகஸ்தானில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் உறுதுணையாய் அமைந்தன” என தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் ஜனவரி மாதம் அஸ்டானாவில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது ரஷ்யா, ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் கலந்துகொண்டு சிரியாவில் யத்தநிறுத்தத்தை ஏற்படுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தின.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg