Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் சாந்தனின் இறுதிக் கிரியை (2ஆம் இணைப்பு)

In இலங்கை
Published: 09:03 GMT, Feb 28, 2017 |
0 Comments
1260
icon_com
This post was written by : Surenth

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை வளாகத்தில் புரட்சிப் பாடகர் சாந்தனின் பூதவுடலுக்கு தற்போது இறுதிக் கிரியைகள் இடம்பெற்று வருகின்றன.

கிளிநொச்சியில் இருந்து பாடசாலை மாணவர்கள் பாண்ட் வாத்தியம் இசைக்க, அன்னாரின் பூதவுடல் கரைச்சி பிரதேச சபை வளாகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

அன்னாரின் இறுதி ஊர்வலத்தில்ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

புரட்சிப் பாடகர் சாந்தனின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி (1ஆம் இணைப்பு)

கிளிநொச்சியில் வைக்கப்பட்டுள்ள புரட்சிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் பூதவுடலுக்கு இன்னும் சற்று நேரத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளன.

சாந்தனின் உடலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கலைஞர்கள் மற்றும் பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, சாந்தனின் பூதவுடல் இன்று மாலை இரணைமடு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Santhan Funeral At Kilinchchi 01 Santhan Funeral At Kilinchchi 02 Santhan Funeral At Kilinchchi 03 Santhan Funeral At Kilinchchi 04 Santhan Funeral At Kilinchchi 05 Santhan Funeral At Kilinchchi 06 Santhan Funeral At Kilinchchi 07 Santhan Funeral At Kilinchchi 08 Santhan Funeral At Kilinchchi 09 Santhan Funeral At Kilinchchi 11 Santhan Funeral At Kilinchchi 12 Santhan Funeral At Kilinchchi 13 Santhan Funeral At Kilinchchi 14

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg