Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

In இந்தியா
Updated: 09:39 GMT, Feb 28, 2017 | Published: 09:25 GMT, Feb 28, 2017 |
0 Comments
1145
This post was written by : Elakkiya

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வங்கி சேவைகள் யாவும் பாதிக்கப்பட்டுள்ளன.

சம்பள உயர்வு, பணியிடங்களை நிரப்புதல், வங்கிகள் தனியார்மயமாக்கப்பட கூடாது, வாராக் கடனை முழுமையாக வசூலிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்தியா முழுவதும் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளும் தமிழகத்தில் மாத்திரம் சுமார் 80 ஆயிரம் பேரும் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப் போராட்டத்தில், தமிழகத்தில் உள்ள பொதுத்துறை, தனியார் துறையைச் சேர்ந்த 7,000 வங்கிக் கிளைகளின் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து வங்கிச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg