Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொடரை வெல்லுமா தென்னாபிரிக்கா? நாளை பலப்பரீட்சை

In விளையாட்டு
Updated: 10:28 GMT, Feb 28, 2017 | Published: 10:16 GMT, Feb 28, 2017 |
0 Comments
1134
icon_com
This post was written by : Risha
new-zealand-vs-south-africa-preview-24-march

தென்னாபிரிக்கா – நியூஸிலாந்து அணிகள் மோதும் நான்காவது ஒருநாள் போட்டி நாளை (புதன்கிழமை) ஹெமில்டனில் நடைபெறவுள்ளது.

ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இரு போட்டிகளில் தென்னாபிரிக்க அணியும், நியூஸிலாந்து ஒரு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளன. அதன்படி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் தென்னாபிரிக்கா நாளைய போட்டியில் களமிறங்கவுள்ளது.

நியூஸிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி, இதுவரை ஒரேயொரு ரி-ருவென்ரி போட்டியில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், மிகுந்த எதிர்ப்பார்ப்பிற்கு மத்தியில் நாளைய நான்காவது ஒருநாள் போட்டியில் விளையாடவுள்ளது. நாளைய போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றும். மாறாக நியூஸிலாந்து வெற்றிபெற்றால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க இறுதிப் போட்டிவரை காத்திருக்க வேண்டி ஏற்படும்.

இதேவேளை, நியூஸிலாந்து அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 8 ஒருநாள் தொடரை கைப்பற்றி உள்ள நிலையில், அதனைத் தக்கவைத்துக் கொள்ள போராடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg