Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்யாவின் ‘கடம்பன்’ படத்திற்காக சூர்யா, மாதவன் இணைவு?

In சினிமா
Published: 09:54 GMT, Feb 28, 2017 |
0 Comments
1073
icon_com
This post was written by : Ravivarman
ari

ஆர்யா நடித்து வரும் ‘கடம்பன்’ படத்தின் டிரைலரை நடிகர்களான சூர்யாவும், மாதவனும் இணைந்து வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இப்படத்தில் ஆர்யா மலைவாழ் மக்கள் கூட்டத்தில் உள்ளவராக நடிப்பதுடன், இப்படத்திற்காக தனது உடற்கட்டை கட்டுமஸ்தாக உருவாக்கியும்  இருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் இப்படத்தின் பெஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘கடம்பன்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடித்துள்ளார். ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவன் இப்படத்தை இயக்கியுள்ளார். அடர்ந்த காடுகளுக்குள் படமாகியிருக்கும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தனது 88-வது தயாரிப்பாக தயாரித்துள்ளது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg