Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விதிமுறைகளுக்கு உட்பட்டே சசிகலா பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்: வழக்கறிஞர் பதில் மனு

In இந்தியா
Updated: 10:18 GMT, Feb 28, 2017 | Published: 10:11 GMT, Feb 28, 2017 |
0 Comments
1139
icon_com
This post was written by : Elakkiya
VK_Sasikala__EPS

விதிமுறைகளுக்கு உட்பட்டே அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதாக சசிகலா சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை)  பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி தலைமை தேர்தல்  ஆணையத்தில் சசிகலாவின் வழக்கறிஞர் மேற்படி மனுவை தாக்கல் செய்துள்ளார்.

விதிமுறைகளுக்கு முரணாகவே அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அது குறித்து இன்றைய தினத்துக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் விதிமுறைகளுக்கு உட்பட்டே அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதாக  பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும் நேரில் வந்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg