Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியாவுடனான தோல்வி இந்திய அணிக்கான சிறிய தடங்கலே: வி.வி.எஸ்.லக்ஷ்மன்

In விளையாட்டு
Updated: 10:44 GMT, Feb 28, 2017 | Published: 10:44 GMT, Feb 28, 2017 |
0 Comments
1162
icon_com
This post was written by : Risha
VVs

அவுஸ்ரேலியாவுடனான தோல்வியானது இந்திய அணிக்கு ஏற்பட்ட சிறிய தடங்கலே. தோல்வியிலிருந்து மீண்டு, இந்திய அணி மீண்டும் எழுச்சி பெறும் என முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

புனேயில் நடைபெற்ற அவுஸ்ரேலிய இந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில், இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில், இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், புனே டெஸ்டில் இந்திய அணி 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியமை எதிர்பாராத ஒன்றாகும். இந்த தோல்வியில் இருந்து இந்திய வீரர்கள் முற்றிலும் பாடம் கற்று இருப்பார்கள். இந்த தோல்வியினால் விராட் கோஹ்லி மற்றும் சக வீரர்கள் எதிர்நோக்கும் வலியை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஆனால் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தமையால் உலகமே அழிந்துவிடப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg