Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: பிரதமர் உறுதி

In இலங்கை
Updated: 11:41 GMT, Feb 28, 2017 | Published: 11:29 GMT, Feb 28, 2017 |
0 Comments
1210
icon_com
This post was written by : Elakkiya
unnamed (34)

கிழக்கு மாகாண பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஒரு வாரத்தினுள் சாதகமான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின்போது, கிழக்கு மாகாண பட்டதாரிகள் மற்றும் கிழக்கின் ஆளணி வெற்றிடங்கள் என பல்வேறான விடயங்களில் அவதானம் செலுத்தப்பட்டது.

இதன்போது கிழக்கு மாகாண பட்டதாரிகளின் கோரிக்கைகள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன் கிழக்கு மாகாண பட்டதாரிகளின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து, கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் முழுமையான தரவுகள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச வெற்றிடங்கள் ஆகியவற்றை முழு அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், பட்டதாரிகளின் பிரச்சினையை தீவிர பிரச்சினையாக கருதி இவ்வார இறுதிக்குள் சாதகமான தீர்வு ஒன்றை பெற்றுக் கொடுக்க முயற்சிகளை மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

அதுமட்டுமின்றி இது தொடர்பான விடயங்கள் குறித்து முதலமைச்சருடன் தொடர்புகொள்வதற்கு பிரதமர் அலுவலகத்திலுள்ள சிரேஷ்ட அதிகாரியொருவரையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg