Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாலாவின் அடுத்த வெளியீடு – ‘நாச்சியார்’

In சினிமா
Updated: 11:47 GMT, Feb 28, 2017 | Published: 11:47 GMT, Feb 28, 2017 |
0 Comments
1143
This post was written by : Ravivarman

ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஜோதிகாவை வைத்து பாலா தனது அடுத்த படத்தினை இயக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி இத்திரைப்படத்திற்கு ‘நாச்சியார்’ என்று தலைப்பிட்டுள்ளார் பாலா. இந்நிலையில் ஜோதிகா நெற்றியில் திருநீறு அணிந்தவாறு குழந்தையை குளிப்பாட்டியபடி இருக்கிறார். அருகில் ஜி.வி.பிரகாஷ் கையில் விலங்கிடப்பட்டு அமர்ந்திருப்பது போன்ற போஸ்டர் அண்மையில்  வெளியாகியிருக்கிறது.

தனது திரைப்படங்களில் அடித்தட்டு மக்களின் வாழ்வியலை தத்ரூபமாக வெளிப்படுத்துவதுடன் நடிக்கும் நடிகர், நடிகைகளை அவர்களின் தோற்றத்திலிருந்து முற்றிலும் மாற்றிக் காட்டுவார். இதனடிப்படையிலேயே இந்த படத்திலும் ஜி.வி.பிரகாஷை அழுக்காக காண்பித்துள்ளார் பாலா.

அத்துடன், பாலாவின் திரைப்படங்கள் வெளிவரும்வரை கதையை யாராலும் யூகிக்க முடியாது. இந்நிலையில் வெளியாகியுள்ள போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளன.

மேலும் ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்திற்கு பின்னர் பாலா, சொந்தமாகத் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg