Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த நடவடிக்கை – றிஸாட் பதியுதீன்

In இலங்கை
Updated: 12:38 GMT, Feb 28, 2017 | Published: 12:34 GMT, Feb 28, 2017 |
0 Comments
1117
icon_com
This post was written by : Ravivarman
aa

“வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன்” என இன்று (செவ்வாய்க்கிழமை) வவுனியா புதிய சாளம்பைக்குளம் ஆயிஸா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.

‘பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்பட்டால் அதனைச் சூழவுள்ள கிராமங்கள் கல்வி நிலையில் வளர்ச்சியடையும். மாணவர்கள் இந்த வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்தித் தரும்படி என்னிடம் கேட்டிருக்கின்றார்கள். உடனடியாகவே இதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளேன்’ என மேலும் தெரிவித்திருந்தார்.

அத்துடன் வெளிநாடுகளிலே கல்விக்காக அதிக பணம் செலவழிக்க வேண்டியிருக்கின்றது. ஆனால் எமது நாட்டில் ஆரம்ப வகுப்பு முதல் பல்கலைக்கழக பட்டப்படிப்பு முடியும் வரை அனைத்தும் இலவசமாகவே கிடைக்கின்றன. மீள்குடியேறிய பின்னரும் கல்வியில் மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

aaaaa aaaaaaaa

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg