Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் காணியும் விடுவிக்கப்படும்

In இலங்கை
Updated: 15:04 GMT, Feb 28, 2017 | Published: 15:04 GMT, Feb 28, 2017 |
0 Comments
1192
This post was written by : Ravivarman

கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்குச் சொந்தமான காணி விடுவிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவிற்குரிய காணியானது தற்போது  ராணுவத்தின் 571 ஆவது படைப்பிரிவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த பகுதியை மீளவும் தங்களிடம் ஒப்படைக்குமாறு கிளிநொச்சி மகா வித்தியாலய நிர்வாகத்தினர் வடக்கு மாகாண முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் குறித்த காணியை விடுவிக்கப் போவதாக படைத்தரப்பிலிருந்து  தங்களுக்கு அறிவித்தல் கிடைத்ததையடுத்து நேரில் சென்று பார்வையிட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் காணி விடுவிக்கப்பட்ட பின்னர் அளவீடு செய்யப்பட்டு கிளிநொச்சி வலயக் கல்வித்திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg