Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எனக்குரிய கடமைகளை உரியமுறையில் நிறைவேற்றினேன் – ஸ்ரீபவன்

In இலங்கை
Published: 16:25 GMT, Feb 28, 2017 |
0 Comments
1123
icon_com
This post was written by : Ravivarman
sri

‘எனக்கான கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றியதாக நம்புகின்றேன்’ என பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தற்போதைய பிரதம நீதியரசராக உள்ள அவர் ஓய்வுபெறுவதை முன்னிட்டு உயர்நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற விஷேட நிகழ்வில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றும்போதே மேற்படி கருத்தினை வெளியிட்டுள்ளார்.

மேலும் சட்டத்தின் அதிகாரம் மற்றும் மக்களின் உரிமைகளை பாதுகாப்பது உயர்நீதிமன்றத்தின் முக்கிய கடமை எனவும் தனது சேவைக்காலத்தில் வழக்குகளின் தாமதத்தைப் போக்குவதற்கு தன்னால் இயன்ற அனைத்து வழிகளையும் கையாண்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளும் கலந்து கொண்டனர்.

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் இலங்கையின் 44 ஆவது பிரதம நீதியரசராக பதவி வகித்திருந்தார். அத்துடன் இவர் இலங்கையின் நீதித்துறை வரலாற்றில்  2ஆவது தமிழ் நீதியரசர் என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg