Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்பின் வரவு செலவுத் திட்டத்தை விமர்சிக்கும் அமெரிக்க இராணுவத்தினர்

In உலகம்
Updated: 17:24 GMT, Feb 28, 2017 | Published: 17:19 GMT, Feb 28, 2017 |
0 Comments
1136
icon_com
This post was written by : elayathambi
a10acd92-da56-4189-a39b-06720cc079a1

டொனால்ட் டர்ம்பின் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன் மொழிவுகளை ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ உயர் அதிகாரிகள் விமர்சித்துள்ளனர். அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்புத் துறைக்கான  நிதி ஒதுக்கீட்டை 10 சத வீதம் அதிகரிக்க ட்ரம் திட்டமிட்டுள்ளார். 54 பில்லியன் டொலர்கள் மேலதிகமாக அதிகரிக்கப்பட இருக்கிறது. இதற்கான நிதியீட்டத்தை ஏனைய செலவீனங்களை  மட்டுப்படுத்துவதன் ஊடாக ஈட்ட முடியும் என ட்ரம் கூறியுள்ளார்.

பாதுகாப்பு செலவீனத்தை ஈடு செய்வதற்காக, கட்டுப்படுத்தப்படும் அல்லது குறைக்கும் செலவீனங்களில் வெளி நாட்டு உதவு தொகைகள் மற்றும் ராஜதந்திர செலவீனங்கள் ஆகியனவும் அடங்குகின்றன.

வெளி நாட்டு உதவு தொகைகள் மற்றும் ராஜதந்திர செலவீனங்களைக் கட்டுப்படுத்துவது அல்லது குறைப்பது மெரும் பாதிப்புக்களை அமெரிக்காவுக்கு உண்டுபண்ணும் என ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். முன்னாள் இராணுவ ஜெனரல்களும் அடமிரல்களும் அடங்கலாக 120 பேர் ஒப்பமிட்டு காங்கிரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ் எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜதந்திர உறவுகளை அசட்டை செய்து விட்டு,  இராணுவத்தை பலப்படுத்துவது எதிர்பார்க்கும் பலனை அமெரிக்காவுக்கு தராது என அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg