Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்போர்ட்டிங் ஜிஜோன் அணியை துவம்சம் செய்து முதலிடத்துக்கு முன்னேறியது பார்சிலோனா அணி

In உதைப்பந்தாட்டம்
Updated: 07:04 GMT, Mar 3, 2017 | Published: 06:56 GMT, Mar 3, 2017 |
0 Comments
1248
This post was written by : Anojkiyan

கழக கால்ப்பந்து அணிகளுக்கு இடையிலான லா லிகா லீக் கால்பந்து தொடரின், நேற்றைய (வியாழக்கிழமை) லீக் போட்டியில், ஸ்போர்ட்டிங் ஜிஜோன் அணியை துவம்சம் செய்து 6-1 என்ற கோல் கணக்கில் நடப்பு சம்பியன் பார்சிலோனா அணி வெற்றிபெற்றுள்ளது.

தனது 17வது வெற்றியை பதிவு செய்த பார்சிலோனா அணி, இந்த வெற்றியின் மூலம் லா லிகா லீக் கால்பந்து தொடரின் புள்ளிகள் பட்டியிலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பார்சிலோனா அணி 6-1 என்ற கோல் கணக்கில், அபார வெற்றிபெற்றது.

பார்சிலோனா அணி சார்பில், மெஸ்சி ஒரு கோலும், லுயிஸ் சுவாரஸ் இரண்டு கோலும், பாகோ ஒரு கோலும், நெய்மர் ஒரு கோலும், இவான் ஒரு கோலும், புகுத்தினர். ஸ்போர்ட்டிங் ஜிஜோன் அணி சார்பில் கார்லோஸ் காஸ்ரோ ஒரு கோல் அடித்தார்.

இதுவரை 25 போட்டியில் விளையாடி இருக்கும் பார்சிலோனா 17 வெற்றி, 6 சமநிலை, 2 தோல்வியுடன் 57 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg