Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்பின் புதிய பயணத்தடை உத்தரவால் முஸ்லிம்கள் அதிருப்தி

In
Updated: 08:18 GMT, Mar 7, 2017 | Published: 05:55 GMT, Mar 7, 2017 |
0 Comments
1300
This post was written by : Sylviya

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்டுள்ள புதிய பயணத்தடை உத்தரவு முஸ்லிம்களை பாதிக்கும் வகையில் உள்ளது எனவும் ஏனையோருக்கு மத்தியில் முஸ்லிம் மக்களுக்கு பாகுபாடு காட்டுவதைப் போல் உள்ளது எனவும் குடிவரவு ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ட்ரம்பின் புதிய பயணத்தடை உத்தரவு தொடர்பில் கருத்து தெரிவித்த அமெரிக்க – இஸ்லாமிய உறவுகள் சபையின் நிர்வாக இயக்குநர், “இந்த புதிய பயணத்தடை மத சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது. ட்ரம்பின் நிர்வாகம் அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்களினது மத உரிமைகளை பாதிக்கும் வகையில் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றது” என தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த கருத்தை அவர் நேற்று வொஷிங்டன் டி.சியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியுள்ளார்.

ட்ரம்பினால் விதிக்கப்பட்டுள்ள புதிய தடை உத்தரவின் படி ஈரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் யேமனைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பயணத்தடை உத்தரவில் ஈராக் மீது ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடை அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த வெள்ளை மாளிகை, ஈராக்கின் வீசா முறைமைகளில் அதிக கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளமை மற்றும் திரையிடல் முறைமையில் புதிய தொழிநுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை ஆகிய காரணங்களாலேயே ஈராக் மீதிருந்த தடை அகற்றப்பட்டது என தெரிவித்திருந்தது.

அத்துடன், அமெரிக்காவில் நிரந்தர வதிவிடம் பெற்றுள்ள முஸ்லிம்கள் மற்றும் கிறீன் கார்ட் (green card holders) வைத்திருப்பவர்களுக்கு குறித்த தடை செல்லுபடியாகாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

ட்ரம்பினால் கடந்த மாதம் விதிக்கப்பட்ட தடை உத்தரவு பல சர்ச்சைகளை கிளப்பியதை தொடர்ந்து குறித்த தடை உத்தரவிற்கு அமெரிக்க நீதிபதி ஒருவர் இடைக்கால தடை விதித்திருந்தார்.

அந்த நீதிபதியின் தடை உத்தரவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் ட்ரம்ப் நிர்வாகம் மேன்முறையீடு செய்த போதும், குறித்த வழக்கில் ட்ரம்ப் தோல்வியையே சந்தித்தார். அதனைத் தொடர்ந்தே குறித்த திருத்தம் செய்யப்பட்ட பயணத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg