Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவின் தடைகளை மீறிய சீன நிறுவனத்திற்கு அபராதம்: வர்த்தக அமைச்சர்

In
Updated: 05:25 GMT, Mar 8, 2017 | Published: 05:25 GMT, Mar 8, 2017 |
0 Comments
1359
This post was written by : Risha

பொருளாதார தடைகளை மீறி ஈரான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளுக்கு உபகரணங்களை ஏற்றுமதி செய்த சீன தொலைத்தொடர்பு நிறுவனமொன்றிற்கு, 1.19 பில்லியன் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வர்த்தக செயலாளர் வில்பர் ரொஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வர்த்தக செயலாளர் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “அமெரிக்க நீதித்துறை, வர்த்தகத்துறை மற்றும் கருவூலத்துறை ஆகியவற்றின் தலையீட்டுடன் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

எமது பொருளாதார தடைகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் என்பனவற்றை மீறி செயற்படுவோர் தக்க தண்டனையை அனுபவிப்பது நிச்சயம். இவ்வாறான செயற்பாடுகளினால் அவர்கள் கடுமையான விளைவுகளை எதிர்நோக்குவர்.

குறித்த சீன நிறுவனமானது கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2016ஆம் ஆண்டு ஜனவரி வரையான காலப்பகுதியில் சுமார் 32 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அமெரிக்க தயாரிப்பு பொருட்களை, அமெரிக்காவின் உரிய ஏற்றுமதி அனுமதியின்றி ஈரானுக்கு அனுப்பி வைத்துள்ளது.

அதேவேளை, ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பொருட்களை வடகொாியாவிற்கு 283 முறை ஏற்றுமதி செய்துள்ளமையும் விசாரணைகளில் இருந்து தொியவந்துள்ளது” என வர்த்த செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg