Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கூட்டங்கள் கண்டியில் இடம்பெறும்: நிமால்

In இலங்கை
Updated: 07:32 GMT, Mar 8, 2017 | Published: 06:01 GMT, Mar 8, 2017 |
0 Comments
1138
This post was written by : Ravivarman

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேதின கூட்டங்கள் இம்முறை கண்டியில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமால் சிறிபால டி சில்வா கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

கெட்டம்பேயிலிருந்து பேரணியாக சென்று கண்டி போகம்பரை மைதானத்தில் பிரதான மேதின கூட்டம் இடம்பெற உள்ளதாகவும், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கட்சியின் ஆதரவாளர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேதின கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இம்முறை மேதினக் கூட்டத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்த கட்சி தீர்மானித்துள்ளதாகவும் நிமால் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg