Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதியாக இருந்தாலும் சட்டத்தினை ஒரே விதமாகவே அமுல்படுத்தவேண்டும்: சரத் பொன்சேகா

In இலங்கை
Updated: 08:43 GMT, Mar 8, 2017 | Published: 06:36 GMT, Mar 8, 2017 |
0 Comments
1152
This post was written by : Ravivarman

புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்களுக்காக மட்டும் சட்டத்தை வேறு விதமாக அமுல்படுத்த முடியாதென்றும் ஜனாதிபதி மற்றும் படைவீரர்கள் அனைவரும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவர்கள்  என்றும்  அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இராணுவ புலனாய்வுப்பிரிவில் கடமையாற்றிய ஒரு சிலரை கைதுசெய்வதனால் இராணுவமோ அல்லது புலனாய்வுப் பிரிவோ சீர்குலைந்துவிடாது. நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்பதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமெனவும் சட்டத்தை மீறிச் செயற்பட எவருக்கும் உரிமை கிடையாது எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தாம் இராணுவ தளபதியாக கடமையாற்றிய காலத்தில் கொழும்பில் புலனாய்வு நடவடிக்கைகளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே மேற்கொண்டார் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg