Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண் சமத்துவத்தை வலியுறுத்தியும் ட்ரம்பிற்கு எதிராகவும் நியூயோர்க்கில் பேரணி

In
Updated: 06:29 GMT, Mar 9, 2017 | Published: 06:29 GMT, Mar 9, 2017 |
0 Comments
1222
This post was written by : Risha

மகளிர் தினத்தை முன்னிட்டு உலகளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்களும் பேரணிகளும் இடம்பெற்றுவந்த நிலையில், பெண்களுக்கு சம உரிமை கோரியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராகவும் நியூயோர்க்கில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்பட்ட நேற்று (புதன்கிழமை) பொருளாதார நியாயத்தன்மையை வலியுறுத்தி பணிப்புறக்கணிப்பிலும் ஈடுபட்டு இருந்தனர்.

கருக்கலைப்பு மற்றும் சுகாதார பராமரிப்பு ஆகியவை குறித்த ட்ரம்பிக் கொள்கைளை கண்டித்து ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதியும் பெண்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் மகளிர் தினத்தில் மீண்டும் ஒன்றுகூடினர்.

“பெண்கள் இன்றேல் உலகம் இல்லை. எனவே பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காகவே இன்றைய தினத்தில் ஒன்றுகூடியுள்ளோம்” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, பெண்களுக்கான உரிமை பிரச்சினை என்பது இங்கு மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் காணப்படுகின்றது என மற்றுமொருவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg