Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதுகெலும்பு உள்ளவா்கள் சர்வதேச விசாரணைகளுக்குப் பயந்தோடத் தேவையில்லை: சுமந்திரன்

In இலங்கை
Updated: 10:49 GMT, Mar 12, 2017 | Published: 10:49 GMT, Mar 12, 2017 |
0 Comments
1980
This post was written by : Ravivarman

முதுகெலும்பு இருந்தால் எந்த விசாரணைக்கும் பயந்தோட தேவையில்லை என ஜனாதிபதிக்கு அறைகூவல் விடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார்.

செங்கலடியில் இடம்பெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கல்குடாத் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பி. மாணிக்கவாசகத்தின் 41வது நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வில் உரையாற்றிய அவர்,

இலங்கை ஜனாதிபதிக்கு ஒரு செய்தியை அழுத்தம் திருத்தமாக நான் சொல்லி வைக்க விரும்புகின்றேன். சமீபத்தில் பலாலியில், ஜனாதிபதி படையினருக்கு மத்தியிலே உரையாற்றும்போது எனக்கு முதுகெலும்பு இருக்கிறது நான் எந்த இராணுவ வீரனுக்கும் எதிராக வழக்குத் தொடுக்க விடமாட்டேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் எந்த விசாரணையையும் நாங்கள் சந்திக்கத் தயார் என்று சொல்லுகின்ற ஒருவருக்குத்தான் முதுகெலும்பு இருக்கிறதென்று அர்த்தம். விசாரணைக்குப் பயந்து ஓடுகின்ற ஒருத்தர் முதுகெலும்பு இருப்பதைப்பற்றி பேச தகுதியில்லை.

ஜெனீவா  தீர்மானத்தில் உள்ள அத்தனை விடயங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு கூட்டமைப்பின் ஊடாக நாம் வலியுறுத்துவோம். இப்போராட்டத்தில் எம்மைச் சேர்ந்தவர்களே தவறிழைப்பதற்கு நாம் அனுமதிக்கப் போவதில்லை. ஏனெனில் இது எமது மக்கள் சம்பந்தப்பட்டது என மேலும் தெரிவித்திருந்தார்.

sum2 sum3 sum4

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg