Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நெதர்லாந்து மக்கள் தவறான ஜனரஞ்சகவாதத்தினை நிராகரித்துள்ளனர்: பிரதமர்

In ஐரோப்பா
Updated: 08:47 GMT, Mar 16, 2017 | Published: 08:32 GMT, Mar 16, 2017 |
0 Comments
1178
icon_com
This post was written by : Elakkiya
_95170337_038502582

நெதர்லாந்து மக்கள் தவறான ஜனரஞ்சகவாதத்தினை நிராகரித்துள்ளனர் என்று பிரதமர் மார்ட் ரூட்டே தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற பொதுத்தேர்தலின் வாக்குகள் எண்ணும் நடவடிக்கை நிறைவுபெறும் தறுவாயில் உள்ளது. அதற்கேற்ப, குடியேற்றத்திற்கு எதிரான சுதந்திரக்கட்சியை (PVV) வீழ்த்தி சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான மக்கள் கட்சியின்  (VVD) வெற்றி நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் மார்ட் ரூட்டே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நெதர்லாந்து மக்கள் இரண்டு செய்திகளுக்கு முதலிடம் கொடுத்து பதிலளித்துள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை வலுவடையச் செய்வதற்கு தற்போதுள்ள கொள்கைகளை தொடர்ந்தும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கும், நெதர்லாந்தின் பொருளாதாரம் மேற்கத்தேய நாடுகளில் சிறந்த ஒன்றாக உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதற்கும் பதிலளித்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

95 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் 150 ஆசனங்களில் 33 ஆசனங்களை சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான மக்கள் கட்சி வென்றுள்ளது. அதேபோன்று 20 ஆசனங்களை குடியேற்றத்திற்கு எதிரான சுதந்திரக்கட்சி வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg