Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நெதர்லாந்து தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்திற்கு சிறந்தது: அங்கெலா மெர்க்கல்

In ஐரோப்பா
Updated: 13:09 GMT, Mar 16, 2017 | Published: 10:45 GMT, Mar 16, 2017 |
0 Comments
1292
icon_com
This post was written by : Elakkiya

நெதர்லாந்து தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்திற்கு சிறந்தது என ஜேர்மனிய அதிபர் அங்கெலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் இஸ்லாமிய எதிர்ப்புகளால் ஏற்பட்ட சவால்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய போட்டியாளரான கிறேட் வில்டர்ஸின் சவால்களிலிருந்து மத்திய வலதுசாரி பிரதமர் மார்க் ரூட்டேக்கு கிடைத்த வெற்றி என்றும் அங்கெலா மெர்க்கல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நெதர்லாந்து எங்களுடைய பங்காளிகள், நண்பர்கள். ஐரோப்பிய சார்பு விளைவுகளுக்கு நெதர்லாந்து வாக்குப்பதிவுகள் வழிவகுத்தன என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். இது ஒரு தெளிவான சமிக்ஞையாக கருதுகின்றேன். அதுமட்டுமின்றி, ஜனநாயகத்திற்கு இது ஒரு நல்ல நாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg