Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்பின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கவில்லை: பிரித்தானிய நிறுவனம் மறுப்பு

In
Updated: 05:46 GMT, Mar 17, 2017 | Published: 05:44 GMT, Mar 17, 2017 |
0 Comments
1384
This post was written by : Elakkiya

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் டொனால்ட் ட்ரம்பின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாக பிரித்தானியாவின் தகவல் தொடர்பு புலனாய்வு நிறுவனமான GCHQ மீது குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில் அதனை குறித்த நிறுவனம் மறுத்துள்ளது.

மேலும், தம்மீதான குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் அபத்தமானது என்பதுடன் முட்டாள்தனமான குற்றச்சாட்டு என்றும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்றும் குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான பராக் ஒபாமா தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வதற்கு GCHQ நிறுவனத்திற்கு உத்தரவிட்டதாக வெள்ளைமாளிகை குற்றம் சாட்டியிருந்தது. இந்த குற்றச்சாட்டை ஒபாமா மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg