Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுவிஸில் ஓய்வூதிய சீர்திருத்த சட்டத்துக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம்

In ஐரோப்பா
Updated: 11:51 GMT, Mar 19, 2017 | Published: 11:51 GMT, Mar 19, 2017 |
0 Comments
1290
This post was written by : Anojkiyan

சுவிஸ்லாந்தில் மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதிய சீர்திருத்த சட்டம் குறித்த பொதுமக்கள் வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக இடம்பெற்றுவந்த விவாதங்களுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி பொதுமக்களின் கருத்தை அறியும் பொருட்டு பொதுவாக்கெடுப்பு நடத்த அரசு முடிவு செய்துள்ளது.

பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு புதிய ஓய்வூதிய சீர்திருத்தம் நடைமுறைக்கு வருமாயின், பெண்களின் ஓய்வு பெறும் வயது 64இல் இருந்து 65 என உயரும். அதுமட்டுமின்றி ஆண்டு வருவாயில் இருந்து ஓய்வூதியமாக வழங்கும் தொகையானது 6.8 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறையும், இருப்பினும் ஊதியத்தில் இருந்து பிடித்தம் சற்று அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

அதனை ஈடுகட்ட மாதந்தோறும் 70 பிராங்க் AVS/AHV வகையினில் ஊக்க ஊதியமாக 2019ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்படும். குறித்த ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கான தொகையை தற்போதுள்ள 8 சதவிகிதத்தில் இருந்து மேலும் 0.6 விழுக்காடு மதிப்புக்கூட்டு வரியை அதிகரிப்பதன் மூலம் ஈடுகட்டப்படும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg