Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நூறு மடங்கு வேகமான இணைப்பை வழங்கும் WiFi தொழில்நுட்பம் உருவாக்கம்

In தொழில்நுட்பம்
Updated: 05:23 GMT, Apr 2, 2017 | Published: 11:04 GMT, Mar 31, 2017 |
0 Comments
1165
icon_com
This post was written by : Shailu
WiFi

தற்போது பாவனையிலுள்ள WiFi இணைய இணைப்பை விட நூறு மடங்கு வேகமான இணைப்பை வழங்கும் புதிய தொழில்நுட்பத்தினை நெதர்லாந்து ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

WiFiஇல் உள்ள வேகக் குறைபாடுகளை போக்கும்வகையில் நெதர்லாந்தைச் சேர்ந்த இந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விநாடிக்கு 40 ஜி.பிக்கும் அதிகமான வேகத்துடன் இணைய இணைப்பினைப் பெற முடியும் என்று அந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, WiFi இணைப்பில் அதிக எண்ணிக்கையிலான இலத்திரனியல் சாதனங்கள் இணைக்கப்படும்போது, வேகம் குறைவதை இதன் மூலம் தவிர்க்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் WiFi இணைப்பில் இணைக்கப்படும் ஒவ்வொரு புதிய சாதனத்துக்கும் பிரத்தியேக ஒளிக்கற்றை மூலம் இணைப்பு பெறப்படும் என்பதால், வேகம் குறைய வாய்ப்பில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg