Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாடு வெட்டும் விவகாரம் – நாடு தழுவிய போராட்டத்திற்கு சுகாதார பரிசோதகர்கள் முஸ்தீபு

In இலங்கை
Updated: 04:02 GMT, Mar 22, 2017 | Published: 04:02 GMT, Mar 22, 2017 |
0 Comments
1220
This post was written by : Ravivarman

எதிர்வரும்  21 நாட்களுக்குள் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படும் செயற்பாட்டில் தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடு முழுவதும்  பொது சுகாதார பரிசோதகர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்  என பொது சுகாதார பரிசோதகர் தொழிற்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

வவுனியாவில்   மாடு வெட்டும் கொல்களத்தில் மூன்று திணைக்களங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடான நிலைமை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு பொது சுகாதார பரிசோதகர் தொழிற்சங்கத்தினால், வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

“1957 ஆம் ஆண்டு இறைச்சி விற்பனை செய்வோர் சட்டத்தின் பிரகாரம் நகரசபை தலைவரினால் எழுத்து மூலமாக அதிகாரமளிக்கப்பட்டவருக்கே அனைத்து அதிகாரமும் கொல்களத்தில் உள்ளது. அதன்படி வவுனியா கொல்களத்தில் பொது சுகாதார பரிசோதகருக்கே எல்லா அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த வேலையை செய்ய விடாமல் அவர்களுக்கு  இடையூறு செய்யப்பட்டுள்ளது.

இதில் சுகாதார வைத்திய அதிகாரிகள் கூடுதலாக தலையிட்டுள்ளனர்.  அவர்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டுமாயின் பொலிஸ் அதிகாரிகளின் மூலமாகத்தான் பொது சுகாதார பரிசோதகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் சுகாதார வைத்திய அதிகாரி திணைக்களத்தினை சேர்ந்தவர்கள் தாங்களாகவே நேரடியாக இச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன்,  இவர்களுக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியும் துணைபோயுள்ளதுடன், அவர் தனக்குள்ள அதிகாரத்தினையும்  மீறி தனக்கு விரும்பியபடி பொது சுகாதார பரிசோதகர் ஒருவருக்கு எதிராகச் செயற்பட்டுள்ளார்” என மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg