Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி மைத்திரி ரஷ்யாவுக்கு பயணமானார்

In இலங்கை
Updated: 04:04 GMT, Mar 22, 2017 | Published: 04:04 GMT, Mar 22, 2017 |
0 Comments
1201
This post was written by : Varshini

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (புதன்கிழமை) காலை ரஷ்யா நோக்கி பயணமானார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் செல்லும் ஜனாதிபதி மைத்திரி, பல சிரேஷ்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதோடு தொழிநுட்பம், சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல துறைகளில் இருதரப்பு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.

ஜனாதிபதியின் இவ் விஜயத்தில் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் எஸ்.பி.நாவின்ன உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர்.

கடந்த 1974ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார். அவரையடுத்து இலங்கையின் அரச தலைவர் ஒருவர் ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg