Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெங்குநோயை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் முன்னுதாரணமான திருகோணமலை நீதிமன்றம்

In இலங்கை
Published: 04:42 GMT, Mar 22, 2017 |
0 Comments
1287
This post was written by : Ravivarman

திருகோணமலை சுகாதார வைத்திய பணிமனையினால் அனைத்து அரச திணைக்களங்களையும் சுத்தமாக வைத்திருக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து இன்று (புதன்கிழமை) திருகோணமலை நீதிமன்ற கட்டிடத்தொகுதிகளை சுத்தப்படுத்தும் சிரமதான வேலைத்திட்டம் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.பிரேமசங்கர் தலைமையில் நடைபெற்றது.

‘சுத்தத்தை பேணுவோம். சட்டத்தை நிலை நாட்டுவோம்’ எனும் தொனிப்பொருளில் திருகோணமலை நீதிமன்றத்தில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் அனைவரும் ஒன்றினைந்து நீதிமன்ற கட்டிடத்தொகுதிகளை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இச்சிரமதானப்பணியில் நீதிபதி உட்பட நீதவான்கள் மற்றும் பதிவாளர்கள்,  நீதிமன்ற ஊழியர்கள், சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் தீவிரமடைந்து வரும் டெங்குநோயினைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சினால் வேலைத்திட்டங்கள் முன்னெடுத்து வரப்படும் நிலையில், நீதிமன்ற ஊழியர்களின் மேற்படி சிரமதான வேலைத்திட்டம் அப்பிரதேச மக்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக அமைவதுடன், சிரமதானத்தின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகள் வழமையாக இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg