Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனைத்து அரச அலுவலகங்களிலும் வாரத்தில் இரு நாட்கள் சிரமதானம் அவசியம்: கிழக்கு முதலமைச்சர்

In இலங்கை
Updated: 05:57 GMT, Mar 22, 2017 | Published: 05:57 GMT, Mar 22, 2017 |
0 Comments
1233
This post was written by : Ravivarman

கிழக்கு மாகாணத்தில் உயிராபத்தை ஏற்படுத்தும் டெங்கு நோய்த் தாக்கத்தை இல்லாதொழிப்பதற்காக அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும், வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களும், தலா இரண்டு மணித்தியாலங்கள் முழுமையான சிரமதானத்தில் ஈடுபட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

டேங்கு நோய்க்கட்டுப்பாடு தொடர்பான விஷேட கலந்துரையாடல் கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில், ஏறாவூர் செய்னுலாப்தீன் ஆலிம் வாவிக்கரைப் பூங்காவில் நேற்றையதினம் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேற்படி கூட்டத்தில் முப்படை அதிகாரிகள், உள்ளுராட்சி நிருவாக அதிகாரிகள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் சமூக நல நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தொடர்ந்து முதலமைச்சர் உரையாற்றுகையில்,

‘வைத்தியசாலைகளைத் தவிர மற்றெல்லா அரச அலுவலகங்களிலும் திங்கட்கிழமை காலை 8.30 மணிமுதல் காலை 10.30 மணிவரை இரண்டு மணித்தியாலங்கள் முழுமையான சிரமதானங்கள் செய்யப்பட வேண்டும் என மாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. குறித்த உத்தரவு டெங்கு அபாயம் குறையும்வரை கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டும்.

மேலும் டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு ஏற்றவிதமாக சூழலை வைத்திருப்போர் மீது எவ்வித தயவும் பாராது சட்ட நடவடிக்கைளை எடுக்குமாறும் நான் உள்ளுராட்சித் திணைக்களங்களை அறிவுறுத்தியுள்ளேன். அத்துடன் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்திற்கு அடுத்த நிலையில் டெங்கு பரவும் எச்சரிக்கைப் பிரதேசமாக மட்டக்களப்பு மாவட்டம் இனங்காணப்பட்டுள்ளது.

அத்துடன் டெங்கு நோயினை இல்லாதொழித்தல் மற்றும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகிப் பெருவதைக் கட்டுப்படுத்தல் போன்ற செயற்திட்டங்களை விரைவாக முன்னெடுப்பதன் மூலம் மக்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளில் நாம் மிகவும் அவதானத்துடன் செயற்படுகின்றோம்’ என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

DSC02639 DSC02664 DSC02678 DSC02681

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg