Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

43 அரசியல் கைதிகளே எஞ்சியுள்ளதாக சுவாமிநாதன் தெரிவிப்பு!

In இலங்கை
Updated: 05:51 GMT, Mar 22, 2017 | Published: 05:45 GMT, Mar 22, 2017 |
0 Comments
1253
This post was written by : Varshini

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் 43 கைதிகளே எஞ்சியிருப்பதாகவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

94 தமிழ் அரசியல் கைதிகள் எவ்வித விசாரணைகளும் இன்றி தொடர்ந்தும் தடுப்பில் உள்ளதாகவும் இவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்காவிட்டால் பிணையிலாவது செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் சுவாமிநாதன் மேற்குறித்த தகவலை வெளியிட்டார்.

அத்தோடு, குறித்த 43 அரசியல் கைதிகளுக்கு எதிராகவும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கு விசாரணையின் பின்னரே அவர்களை விடுவிக்க முடியுமென்றும் அமைச்சர் சுவாமிநாதன் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg