Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறைச்சாலை பேரூந்து மீதான தாக்குதல்: பிரதான சந்தேகநபர் கைது

In இலங்கை
Updated: 06:20 GMT, Mar 22, 2017 | Published: 06:20 GMT, Mar 22, 2017 |
0 Comments
1190
This post was written by : Varshini

கடந்த மாதம் களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரு சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேரை காவுகொண்ட குறித்த தாக்குதல் சம்பவத்துடன் நேரடி தொடர்புடையவர் எனக் கருதப்படும் குறித்த சந்தேகநபர், செல்லக்கதிர்காமம் பகுதியில் மறைந்திருந்த நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய குறித்த நபரிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த முக்கிய புள்ளியாக கருதப்படும் சமயன் உள்ளிட்ட குழுவினரை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லும் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், சமயன் உள்ளிட்ட ஐந்து கைதிகளும் இரு சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் கொல்லப்பட்டனர்.  சம்பவம் தொடர்பில் ஏற்கனவே இருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலை நடத்துவதற்கு சிறைச்சாலை அதிகாரிகளும் உடந்தையாக செயற்பட்டதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg