Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏறாவூர் இரட்டைப் படுகொலைச் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

In இலங்கை
Updated: 07:28 GMT, Mar 22, 2017 | Published: 07:28 GMT, Mar 22, 2017 |
0 Comments
1176
This post was written by : Ravivarman

ஏறாவூரில் தாய் மற்றும் மகளின் இரட்டைப் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய  6 சந்தேக நபர்களையும்   ஏப்ரில் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி உத்தரவிட்டுள்ளார்.

ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) 6 சந்தேக நபர்களும் ஆஜர் செய்யப்பட்டபோதே நீதிபதி மேற்படி உத்தரவிட்டார்.

மேலும் ஏறாவூர் பிரதேசத்தில் முகாந்திரம் வீதியில்  வசித்துவந்த, 56 வயதுடைய நூர்முஹம்மது உஸைரா மற்றும் அவரது மகளான 32 வயதுடைய  ஜெனீராபானு மாஹிர் ஆகியோர் கடந்த செப்ரெம்பெர் 11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் கடந்த செப்ரெம்பெர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக விளக்கமறியல் உத்தரவில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg