Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சரியான திட்டமிடல் இன்றி டெங்கு நோய்க்கு எதிரான போரில் வெற்றிபெற முடியாது: பனாகொட

In இலங்கை
Updated: 08:00 GMT, Mar 22, 2017 | Published: 08:00 GMT, Mar 22, 2017 |
0 Comments
1295
This post was written by : Ravivarman

சரியான திட்டமிடல் இல்லாவிட்டால் டெங்கு உயிர்க் கொல்லிக்கு எதிரான போரில் தோல்வியடைய வேண்டிவரும் என மட்டக்களப்பு புணானை 23வது பிரிவு பிரிகேடியர் எஸ்.டபிள்யூ.எஸ்.டி.பி. பனாகொட எச்சரித்தார்.

டெங்கு நோயினை இல்லாதொழித்தல் மற்றும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகிப் பெருகுவதைக் கட்டுப்படுத்தல் போன்ற செயற்திட்டங்களை ஆராயும் விஷேட கலந்துரையாடல் ஏறாவூர் செய்னுலாப்தீன் ஆலிம் வாவிக்கரைப் பூங்காவில் நேற்றைய தினம் இடம்பெற்றபோதே மேற்படி தெரிவித்துள்ளார்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரிகேடியர்,

‘டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை இனங்கண்டு அழிப்பதிலும், மேலும் டெங்கு பரவாமல் தடுப்பதிலும் சரியான திட்டமிடல் இல்லாவிட்டால் டெங்கு நோயைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது சிரமம்.

மேலும் டெங்கு அதிகமாகத் தாக்கியிருக்கும் பிரதேசங்கள், தாக்கப்படக் கூடிய பிரதேசங்கள், எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய பிரதேசங்கள் என வகைப்படுத்தி, நன்கு திட்டமிட்டு வளங்களைப்  பகிர்ந்து ஒருங்கிணைந்த நடவடிக்கையில் அனைவரும் இறங்கினால் டெங்கு அபாயத்தைத் தவிர்க்கலாம்.

அத்துடன் விழிப்புணர்வு என்பது இன்றோடு அல்லது டெங்கு அபாயம் இருக்கும் காலப்பகுதியுடன் மாத்திரம் நின்று விடாது, தொடர்ந்து செயற்பட வேண்டும். சிறந்த அர்ப்பணிப்புள்ள டெங்கு ஒழிப்பு செயலணியும் ஆக்கபூர்வமான திட்டத் தயாரிப்பும் இருந்தால் டெங்கு ஒழிப்புப் போரில் நாம் வெற்றி பெறலாம்’ என பிரிகேடியர் பனாகொட மேலும் தெரிவித்தார்.

DSC02642 DSC02666

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg