Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிணை முறி மோசடி தொடர்பான விசாரணையை கண்காணிப்பதற்கு அர்ஜூன மகேந்திரனுக்கு அனுமதி!

In இலங்கை
Updated: 07:58 GMT, Mar 22, 2017 | Published: 07:58 GMT, Mar 22, 2017 |
0 Comments
1188
This post was written by : Varshini

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அர்ஜூன மகேந்திரனின் சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு தனது சட்டத்தரணி சகிதம் சமூகமளித்திருந்த அர்ஜூன் மகேந்திரன், பிற்பகல் 1 மணிவரை விசாரணைகளை கண்காணித்துள்ளார். நேற்றைய தினம் மத்திய வங்கியின் நாணய சபையின் செயலாளர் எச்.ஏ.கருணாரத்ன ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பில் அர்ஜூன மகேந்திரன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு அவரை அனுமதித்தமை குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நேற்றைய தினம் அவர் ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தபோது ஆணைக்குழுவில் சர்ச்சை ஏற்பட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg